...
செய்திகள்

விக்டர் சமரவீர தொடர்ந்தும் விளக்கமறியலில்.

அவன்கார்ட் வழக்கின் நான்காவது சந்தேகநபரான ரக்னா லங்கா நிறுவனத்தின்  தலைவர்  விக்டர் சமரவீர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குனுவல முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் 05 ஆவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாலித பெர்ணான்டோ மற்றும் ஆறாவது சந்தேகநபரான கருணாரத்ன பண்டார அதிகாரி ஆகியோரும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen