செய்திகள்

விக்டோரியா நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் புதிய நிலஅதிர்வு அளவீட்டுக் கருவி

விக்டோரியா நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் 10 புதிய நிலஅதிர்வு அளவீட்டுக் கருவிகளை பொருத்துவதற்கு புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியிலிருந்து குறித்த உபகரணங்களைக் பெற்றுக் கொள்ளவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.

குறித்த நில அதிர்வு அளவீட்டுக்கருவிகளை நிர்மாணித்ததன் பின்னர் விக்டோரியா நீர்த் தேக்கத்தை அண்மித்து ஏற்படக்கூடிய அதிர்வுகளை அளவீடு செய்ய முடியும் எனவும் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது காணப்படுகின்ற நிலைமையின் பிரகாரம் நில அதிர்வுகளின் சரியான அளவைக் கணிக்க முடியாத நிலையுயள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மககனதராவ , பல்லெகெல , புத்தங்கல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் நில அதிர்வு அளவீட்டுக் கருவிகள் பொருத்தப்பட்டு ள்ளன. கடந்த நாட்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியிருந்தது.

Related Articles

Back to top button