செய்திகள்

விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களின் சதவீதம் அதிகரிப்பு !!!!!.

இலங்கை அரசியல் வரலாற்றில் தட்போதைய அரசாங்க ஆட்சியிலே 600,000க்கும்
மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஆணையங்களில்
விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய முன்னாள்
அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்
இலங்கையர்களின் சதவீதம் அண்மைய காலங்களில் மிகப் பெரிய அளவில்
அதிகரித்ததுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் சிங்கள பௌத்தர்கள்
என்பதும், அறிஞர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள்
இதில் அடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசா வழங்கல் சேவைகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா,
அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கு
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மை இல்லாமல் நாட்டை நிர்வகிப்பதே இதற்கு
காரணமாகும்.

இதுபோன்ற நிலைமை நாட்டின் எதிர்காலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்
என்று அவர் மேலும் கூறினார்.

Related Articles

Back to top button