அரசியல்
விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பாதுகாப்பு
பாதுகாப்பு அமைச்சைத் தவிர்த்து ஏனைய 30 அமைச்சுக்களுக்கும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்துக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது நிலவுகின்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.