கல்விமலையகம்

விஞ்ஞான ஆய்வுகளுக்கான ஜனாதிபதி விருதைப்பெற்ற பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நவரட்ணராஜா..

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் இலங்கையின் மிக உயர்ந்த விருதான “விஞ்ஞான ஆய்வுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் “American Society of Civil Engineers சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றிற்காக இன்று (06/04/2021) இலங்கையின் தேசிய ஆராய்ச்சி சபை (National Research Council-NRC) இனால் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நவரட்ணராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது தொடர்பில் அவர் குறிப்பிடும் போது கடினமான சவால்களை தாண்டி வந்த என் கல்விப் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல். கடின உழைப்பின் பின் இம்மாதிரியான விருதுகளை பெறுவது மற்றற்ற மகிழ்ச்சி,என்றும் போலவே இந்த விருதுக்கும் எனது சிறு வயது தொடக்கம் பல்கலைக்கழக கல்வி வரை கற்றுத்தந்த அனைத்து ஆசிரியர்களும் எனது பெற்றோர்களும் மற்றும் எனது குடும்பமும் உரித்துடையவர்கள்,எனது ஆசிரியர் ஜீவராஜனும் எனது அப்பாவும் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். அவர்களது ஆசிர்வாதம் எப்போதும் எனக்குண்டு.

இந்த பெறுமதிமிக்க விருதை பெற்றுக்கொண்ட கலாநிதி நவரட்ணராஜா அவர்களுக்கு

மலையகம் .lk வாழ்த்துக்களை பதிவுசெய்கின்றது.

https://www.facebook.com/malaiyagamlk/videos/1057727674676454

Related Articles

Back to top button