...
தொழில்நுட்பம்

விண்டோஸ் பயனர்களுக்கு கூகுள் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்

மைக்ரோசொப்டின் இயங்குதள வரிசையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்த இயங்குதளமாக விண்டோஸ் 7 காணப்படுகின்றது . இவ்வியங்குத்தளம் அறிமுகம் செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகின்றது .இதன் பின்னர் விண்டோஸ் 8 , விண்டோஸ் 10 இயங்குதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன . இந்நிலையில் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான சப்போர்ட் அனைத்தையும் மைக்ரோசொப் இடைநிறுத்தியுள்ளது .இதனால் பயனர்கள் விண்டோஸ் 8 , விண்டோஸ் 10 இயங்குதளங்களை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் .எனினும் சில வசதிகள் காரணமாக தற்போதும் விண்டோஸ் 7 இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்கள் இருக்க தான் செய்கின்றனர் .இவர்களுக்காக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 22 ம் திகதி வரை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குரோம் உலாவிற்கான சப்போர்ட்டினை தரவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது .இதேவேளை பல பெரிய நிறுவனங்களும் தற்போது வரை விண்டோஸ் 7 இயங்குதளத்தினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .

Related Articles

Back to top button


Thubinail image
Screen