...
செய்திகள்தொழில்நுட்பம்

விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண் சிரிஷா

அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பந்தலா என்ற பெண்மணி, விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை நிகழ்த்தவுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிஷா பந்தலா (34 வயது), அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தான் வளர்ந்தார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் இன்று விண்வெளிக்கு பறக்கவிருக்கிறார். விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக முதல் முறையாக முழு அளவில் மனிதர்களை ஏற்றிக் கொண்டு கேலக்டிக் விண்கலம் இன்று விண்வெளிக்கு புறப்பட உள்ளது. இதில் நிறுவன உரிமையாளரான பிரான்சனுடன், சிரிஷா உட்பட 6 பேர் பயணிக்க உள்ளனர்.

நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து விண்கலம் புறப்பட உள்ளது. இதன் மூலம் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு விண்வெளியில் கால்பதிக்கும் மூன்றாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை சிரிஷா பெற உள்ளார். விண்வெளிக்கு பறக்கவிருக்கும் சிரிஷா பந்தலா, கடந்த 2015ம் ஆண்டு விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோ நாட்டிக்கல் பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார்.

* ‘விர்ஜின் கேலக்டிக்டி’யின் இரட்டை விமானங்களுக்கு மத்தியில் யூனிட்டி-22 விண்கலம் பொருத்தப்பட்டுள்ளது.

* உடனடியாக, யூனிட்டி விண்கலத்தில் உள்ள ஹைபிரிட் ராக்கெட் மோட்டார் இயங்கத் தொடங்கி, விண்வெளி நோக்கி பயணத்தை தொடங்கும்.

* 50,000 அடி உயர இலக்கை இரட்டை விமானங்கள் அடைந்ததும், அங்கிருந்து யூனிட்டி விண்கலம் விடுவிக்கப்படும்.

* இந்த விண்கலம் மூலம் அடுத்தாண்டு விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்.

* அங்கிருந்து 80 கிமீ உயரத்தில் புவிஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளியில் விண்கலம் நுழையும்.

* அதில் செல்பவர்கள் அங்கிருந்தபடி பூமியை ரசிப்பார்கள். பின்னர், மீண்டும் விண்கலம் பூமிக்கு திரும்பும்.

* கட்டணம் ஒருவருக்கு சுமார் ரூ.4.5 கோடி.

Related Articles

Back to top button


Thubinail image
Screen