உலகம்செய்திகள்தொழில்நுட்பம்

விண்வௌி நிலையத்திலிருந்து 4 வீரர்கள் தரையிறக்கம்

சர்வதேச விண்வௌி நிலையத்திலிருந்து 04 விண்வௌி வீரர்கள் பூமியை வந்தடைந்துள்ளனர்.

53 ஆண்டுகளின் பின்னர் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தரையிறக்கம் இதுவாகும்.

நாசாவைச் சேர்ந்த 3 வீரர்களும், ஜப்பான் விண்வௌி ஆய்வு நிறுவனமான ஜக்ஸாவைச் சேர்ந்த ஒரு விண்வௌி வீரரும் புவியை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் சுமார் 6 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்திருந்தனர்.

புளோரிடா மாநிலத்தின் பனாமா நகரில் அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.56 க்கு விண்வௌி வீரர்கள் தரையிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button