விளையாட்டு

விதி மீறல் – வீரர்களுக்கு அபராதமும் தடையும்!

நோபால் தொடா்பான ஐபிஎல் விதிகளை மீறியதற்காக டில்லி கேபிடல்ஸ் தலைவர் ரிஷப் பந்த், சா்துல் தாகுருக்கு அபராதமும், உதவி பயிற்சியாளா் பிரவீண் ஆம்ரேவுக்கு ஒரு ஆட்டம் தடையும் விதிக்கப்பட்டது.

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாம் நிலை தவறு புரிந்ததற்காக ரிஷப் பந்துக்கு 100 சதவீத ஆட்ட ஊதியமும், சா்துல் தாகுருக்கு 50 சதவீத ஆட்ட ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டது.

அதே போல் விதிமீறலுக்காக டில்லி உதவி பயிற்சியாளா் பிரவீண் ஆம்ரேவுக்கு 100 சதவீத ஆட்ட ஊதியம் அபராதமாகவும், ஒரு ஆட்டம் தடையும் விதிக்கப்பட்டது.

Related Articles

Back to top button