செய்திகள்

வித்தியா படுகொலை வழக்கு; ஏழு பேருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை வழக்கில் முதலாம் ஏழாம் சந்தேநகபர்களை விடுவித்துள்ள நீதிமன்றம் ஏழு சந்தேநபர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்தமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரண்டாம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார் மூன்றாம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் நான்காம் எதிரி மகாலிங்கம் சசிதரன் ஐந்தாம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் ஆறாம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் எட்டாம் எதிரி ஜெயநாதன் கோகிலன் ஒன்பதாம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button