நுவரெலியாமலையகம்

விந்துலையில் பிரஜா பொலிஸ் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு…

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பாளர்களுக்கு பிரஜா பொலிஸ் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

லிந்துலை நு/ சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று (08)மாலை 4.00 மணியளவில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

லிந்துலை பொலிஸ் நிலையத்தில் உள்ள சில உயர் அதிகாரிகளை கௌரவிக்கும் முகமாக நினைவு சின்னங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பொலிஸ் அதிகாரி,சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரி திரு.சுந்தர்ராஜன், சிவில் பாதுகாப்புக்கு குழுக்கள், சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,பொதுமக்கள், நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்

இந்நிகழ்வை மோகன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, சன்முகநாதன்,பாலேந்திரன்,ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாட்டு செய்திருந்தனர்.

பா.பாலேந்திரன்

Related Articles

Back to top button