உலகம்செய்திகள்

வியட்நாமில் அதிக வீரியமுள்ள வைரஸ் கண்டுபிடிப்பு ; காற்றிலும் வேகமாக பரவுகிறதாம்!

வியட்நாம் நாட்டில் புதிய வகை வீரியம் கொண்ட கொவிட்-19 பாதிப்பு உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வகைத் தொற்று அதிவேகமாக பரவுவதாகவும், காற்றிலும் அது பரவக்கூடியது எனவும் வியட்நாம் சுகாதாரத் துறை அமைச்சர் Nguyen Thanh Long தெரிவித்துள்ளார். வியட்நாமில் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்களை குணப்படுத்துவது கடினமாக இருந்தது எனவும் இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ல் சீனாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 வைரஸ், உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அதன்பின்னர், அவ்வைரஸ் உருமாற்றம் அடைந்து பல நாடுகளுக்கும் பரவியது. அவை, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரேசில் வைரஸ், பிரிட்டன் வைரஸ், தென்ஆப்பிரிக்கா வைரஸ் என வகைப்படுத்தி கூறப்பட்டன.

இந்நிலையில், வியட்நாம் நாட்டில் புதிய வகை அதிக வீரியம் கொண்ட வைரஸ் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான கொவிட் 19 தடுப்பு நடவடிக்கைகளால் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மொத்தம் 6,908 பேருக்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 47 பேர் கொவிட்19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அங்கு உருமாறிய கொவிட்19 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே வியட்நாமில், 7 விதமான கொவிட்19 வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொவிட்19 குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குறைந்த எண்ணிக்கையில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 6 இலட்சத்து 9 ஆயிரத்து 421 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை கொரோனா தொற்றுக்கு 3 இலட்சத்து 25 ஆயிரத்து 998 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com