செய்திகள்தொழில்நுட்பம்

வியாழன் கோளின் வடக்குப் பகுதி பீட்சாவை போல் தோற்றம்…

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள் மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது. இதனால் அதில் நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட விடியோவை நாசா பகிர்ந்துள்ளது. அதில் வியாழன் கோளின் மேல்பகுதி பீட்சாவைப் போன்று இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிகம் மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், வியாழன் கோளின் ஆழமான பகுதிகள் என்றும், சிவப்பு நிறத்திலுள்ள பகுதிகள் வியாழன் கோளின் மேற்புறப்பகுதி எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Back to top button