...
விளையாட்டு

விராட் கோலியின் புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டின் 3 வகைப் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்கிற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய அணியின் தலைவர் விராட் கோலி, 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்டுகள், 254 ஒருநாள், 95 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளில் பங்கேற்றதில்லை. மும்பை டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் இடம்பெற்று 50 வது வெற்றியில் பங்களித்துள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 50 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடையாது.

விராட் கோலி
டெஸ்டுகள் : ஆட்டங்கள் – 97, வெற்றிகள் – 50
ஒருநாள் : ஆட்டங்கள் – 254, வெற்றிகள் – 153
டி20 : ஆட்டங்கள் – 95, வெற்றிகள் – 59

SHARE OR SAVE THIS POST FOR LATER USAGE

Related Articles

Back to top button


Thubinail image
Screen