விளையாட்டு

விராட் கோலியை விழித்த காத்திருக்கும் 7 வயது சிறுவன்

இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் பொக்சிங் டே டெஸ்டில் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவன் அவுஸ்திரேலிய அணியின் இணை தலைவராக செயற்படவுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லர்.

அரிய வகை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட ஆர்ச்சி சில்லர் உடல்நிலை காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளார்.அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தலைவராக வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என தனது தந்தையிடம் அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனின் ஆசையை நிறைவேற்றி வைக்க விரும்பிய அவரது தந்தை, இதுகுறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தெரிவித்துள்ளார்.அவர் இந்தியாவிற்கு எதிரான மெல்போர்ன் ‘பொக்சிங் டே’ டெஸ்டிற்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க ஏற்பாடு செய்தார்.

அதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி மெல்போர்னில் நடைபெற உள்ள ‘பொக்சிங் டே’ டெஸ்டிற்கான அவுஸ்திரேலிய அணியில் சிறுவன் ஆர்ச்சி சில்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.

மெல்போர்னில் நேற்று நடந்த ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஆர்ச்சி சில்லர் கலந்து கொண்டார்.சுழற்பந்து வீச்சாளரான சில்லர், இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சி சில்லர் அவுஸ்திரேலிய அணியின் இணை தலைவராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

31 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button