...
செய்திகள்

விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங் டன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம் பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற் களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந் தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலி யுறுத்தி வரு வதால் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் கொழுந் தினை பறிக்க முடி யாத சூழ்நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப் பட்டுள்ளதாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
This image has an empty alt attribute; its file name is 46.jpg
அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்குக் குறைவாகக் கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறை வடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக் கட்டான நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ள தாக தங்களது ஆத்தங்களை வெளிப்படுத்தினர்.
மேலும், திடீரென கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ள தால், தாம் ஒவ்வொரு நாளும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதால் விலை அதிகரிப்பு மேலும் சிர மத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தோட்ட நிர்வாகமும் தேயிலை மலை களுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங் களைச் செய்வதில்லை.
இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லல்லா துயரங்களை அனு பவித்து வரு வதாக இவர்கள் தெரிவிப்பதுடன், அரசாங்கம் தமது பிரச் சினைகளைக் கண்டு கொள்வதில்லை எனவும் மலையக அரசியல் வாதிகள் தேர்தல் காலத்தில் மாத் திரம் வாக்குகளைப் பெறுவதற்கு வரு வதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண் டாம் என எச்சரிக்கை விடுத் ததுடன் தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத் தர சம்மந்தப் பட்டவர்கள் முன்வர வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
This image has an empty alt attribute; its file name is 1638172674-PROTEST-2.jpg

Related Articles

Back to top button


Thubinail image
Screen