செய்திகள்

விவசாயிகளுக்கு ஒர் மகிழ்ச்சி தரும் செய்தி.!

நச்சுத் தன்மையற்ற நாட்டிற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் உதவுவதற்காக மக்கள் வங்கி ‘சாரபூமி’ என்ற கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இதனூடாக சலுகை வட்டி அடிப்படையில் முதலீடுகளுக்காக அதிகபட்ச 10 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலமும், மூலதனத் தேவைகளுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலமும் வழங்கப்படும்.

உர உற்பத்தியாளர்கள் ‘சாரபூமி’ கடன் திட்டத்திற்கு தகுதிபெற தேசிய உரச் செயலகத்திடமிருந்து பொருத்தமான சான்றிதழைப் பெற வேண்டும், அதே நேரத்தில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லி உற்பத்தியாளர்கள் விவசாயத் திணைக்களத்தின் பூச்சிக்கொல்லிகள் பதிவு அலுவலகத்திலிருந்து பொருத்தமான உரிமத்தைப் பெற வேண்டும். உர உற்பத்தியில் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் பொருளாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் சாத்தியமானதாக இருக்க வேண்டும்.

அத்துடன், உரங்களை கொள்வனவு செய்ய அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது கட்டாயமாகும். நாடு முழுவதும் உள்ள 741 கிளைகளில் அதன் சேவை வலையமைப்பின் எந்தவொரு கிளையினூடாகவும் இந்த கடன் திட்டம் தொடர்பான கடன் வழங்கலை எளிதாக்க மக்கள் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பான மேலதிக தகவல்களை 011-2481356 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

அரச தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com