செய்திகள்

வீடுகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில், வீடுகளில் இடம்பெறும் திடீர் விபத்துக்களானது, முன்னைய காலத்துடன் ஒப்பிடுகையில், 50 இலிருந்து 75 சதவீதம்வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், வீதி விபத்துக்கள் 9 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார். பல்வேறு விபத்துக்களினால், வருடாந்தம் 12 இலட்சம் பேர் வரை அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

வீதி விபத்துக்கள், கீழே வீழ்தல், சிராய்ப்பு, உடலில் விஷம் கலத்தல், விலங்குக்கடி, மின்சார தாக்கம், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற பல விபத்துக்கள் காரணமாக வருடந்தோறும் 12,000 பேர் வரை உயிரிழப்பதாகவும் விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button