செய்திகள்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதி ..

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதி ஒன்று வழங்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (18) காலை புறக்கோட்டையில் உள்ள வியாபார நிறுவனங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நிவாரண பொதி, சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக  இந்த திட்டம் வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, குறித்த நிவாரணப் பொதியை வீட்டிற்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Related Articles

Back to top button
image download