...
செய்திகள்

வீடு தேடிவந்து ஒருவர் அடித்து கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலகெதர பிரதேசத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வெலிபென்ன பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் வலகெதர, மனன்னாவத்தை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக உயிரிழந்தவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படகின்றது.

சடலம் களுத்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிபென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen