மலையகம்
வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் கைவரிசையை காட்டி நபர்: தேடும் பணியில் பொலிஸார்

ஹட்டன் – கொட்டகலை பகுதியில் வீடொன்றில் நுழைந்து கைவரிசையை காட்டிய சந்தேகநபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் கொட்டகலை, பெரகும்புர பிரதேசத்தின் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் யாரும் இல்லாத போது சந்தேகநபர் வீட்டில் நுழைந்துள்ளதாக திருடி சென்றுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடை ய சந்தேகநபரொருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டின் உரிமையாளர் பாரவூர்திகளில் வேறு பிரதேசங்களுக்குச் சென்று வாகன விற்பனையில் ஈடுபடுவதை நன்கு அறிந்த நபரொருவரே இந்த கொள்ளையினை மேற்கொண்டிருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சந்தேகநபர் வீட்டின் அருகில் சுற்றித்திரிவது அங்கு பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.