செய்திகள்

வீட்டு அறையினுள் கணவனும் மனைவியும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

அகலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இருவர் கூரிய ஆயுததத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அகலவத்த, அடஹவுலஹேன பகுதியில் உள்ள லயன் வீடொன்றின் அறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று  மதியம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

52 வயதுடைய திலகசிறி என்பவரும் அவருடைய 49 வயதுடைய சாந்தனி டெக்லா எனும் மனைவியுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவதாகவும் 19 ஆம் திகதி இரவு இருவரும் சத்தம் போடும் சத்தம் கேட்டதாகவும் அயல் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download