செய்திகள்

வீதியில் வைத்து கார் ஒன்றுக்கு எரிபொருள் வழங்கிய பௌசர்!

கொழும்பு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில் பௌசர் ஒன்று கார் ஒன்றுக்கு வீதியில் வைத்து எரிபொருள் நிரப்பும் படங்களும் காணொளியும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் வரிசைகளில் காத்துக்கிடக்கும் நிலையில் இச்சம்பவம் மக்கள் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது.
மேலும் அந்தக் கார் மருத்துவர் ஒருவருக்குச் சொந்தமானது என்று காரின் முகப்புக் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button