செய்திகள்

வூஹானில் அவசர கால தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

சீனாவின் வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை
ஆரம்பமாகியுள்ளது.

ஹுபெய் மாகாண தலைநகரான வூஹானில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி
முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட வூஹான் நகரில், ஜனவரி மாதம் 23ஆம்
திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினை அடுத்து, ஹுபெய் மாகாணம் முழுதும் ஊரடங்கு
அமுல்படுத்தப்பட்டது.

ஹுபெயில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து ஏப்ரல் மாதம் எட்டாம்
திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

ஹுபெய் மாகாணத்தில், இதுவரை, 68 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள
நிலையில் , அதில், 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் வூஹான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை சீன அரசாங்கம்
முன்னெடுத்திருந்தது.

இதில், மிக சிறிய எண்ணிக்கையிலேயே தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டது.

தலைநகர் பீஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், மிகப் பெரிய அளவிலான கொரோனா
பரிசோதனை நடவடிக்கைகளை, சீன அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இதில், பீஜிங்கை சேர்ந்த, 27 பேருக்கு நேற்று முன்தினம் தொற்று உறுதியானது.

சீன தயாரிப்பான, 11 தடுப்பூசிகள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சோதனைக்கான
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வூஹான் நகரில், அவசரகால தடுப்பூசி வழங்கும்
பணியை, அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

Related Articles

Back to top button