அரசியல்செய்திகள்

வெகுசன ஊடகங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு சபாநாயகரிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை.

தேர்தல் காலப்பகுதியில் காணப்படும் வெகுசன ஊடகங்கள் தொடர்பிலான வழிகாட்டல்கள், சட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவுடனான கலந்துரையாடலின் போதே, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பிலான யோசனையை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள், மேலும் சுயாதீனமாகவும், நியாயமான முறையிலும் நடைபெறவதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விடயம் அத்தியாவசியம் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button