சமூகம்

வெகு சிறப்பாக இடம்பெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் இன்று ஹட்டன் டீ.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டிற்கான மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா தேயிலை வளர்நாடு கண்டோம் ஏற்றமிகு வாழ்வு காண்போம்’ என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் கண்டி காரியாலய இந்திய உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திரசிங், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அரச முக்கியஸ்தர்கள் கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button