ஆன்மீகம்சிறப்புசெய்திகள்

வெசாக் பூரணை தினம் இன்று.!

வெசாக் பூரணை தினம் இன்றாகும். உலக வாழ் பௌத்தர்கள் புத்த பெருமானின் ஜனனம், ஞானம் பெறல், பரிநிர்வாணம் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை பக்தி பூர்வமாக இன்று நினைவு கூறுகின்றனர். தேவர்களின் அழைப்பை ஏற்று இன்று போன்றதொரு பௌர்ணமி தினத்தில் லும்பினி பூங்காவில் புத்த பகவான் அவதரித்தார். 7 தாமரைகள் மலர அதில் தனது கால் தடங்களை சித்தார்த்தர் பதித்தார். வயோதிபர், நோயாளி,உயிரற்ற தேகம்,துறவி எனும் நான்கு காட்சிகளை கண்டு அரண்மனையை விட்டு வெளியேறிய இளவரசர் சித்தார்த்தர், இன்று போன்றதொரு வெசாக் பூரணை தினத்தில் ஞானம் பெற்றார்.

உலக மக்களிக்கு நிலையற்ற தன்மையை உணரச் செய்த புத்த பகவான் இதேபோன்றதொரு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார். புத்த பகவானின் இலங்கைக்கான மூன்றாவது விஜயம் வெசாக் பூரணை தினத்தில் இடம்பெற்றதால் இலங்கை மக்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. மணியக்கித்த என்ற நாகர் இன மன்னரின் அழைப்பை ஏற்று களனிக்கு விஜயம்செய்த புத்த பெருமான், வெசாக் பூரணை தினத்தில் மத்தியமலைநாட்டில் தனது பாதச்சுவட்டைப் பதித்ததாக பௌத்த வரலாறு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com