செய்திகள்

வெடிச்சம்பவங்கள் தொடர்பாக 17 நாட்களுக்கு முன்னரே தகவல் – அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களையடுத்து இன்று அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்கள், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு 17 நாட்களுக்கு முன்னரே உளவுப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன் போது கூறினார்.

அத்துடன் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் என்ற வகையில் தமக்கு உரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பின் அது குறித்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்திக்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறினார்

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெயர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாமல் இருந்தது ஏன் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com