செய்திகள்

வெடிமருந்துகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது.

புத்தளத்தில் வெடிமருந்துகள் மற்றும் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான இளைஞர்கள் சிலரை சோதனைக்குட்படுத்திய சந்தர்ப்பத்தில் அவர்கள் வசமிருந்த 12 மில்லிமீற்றர் வகையிலான 05 வெடிபொருட்கள் மற்றும் 3 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதுடன், சந்தேகநபர்கள் குறித்த வெடிபொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button