...
விளையாட்டு

வெற்றியின் அருகில் இலங்கை ; ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று

காலியில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் இரண்டு இன்னிங்ஸ்ளிலும் இதுவரை 16 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அதில் 15 விக்கெட்டுகள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களினால் வீழ்த்தப்பட்டவை ஆகும்.

பந்து வீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 7 விக்கெட்டுக்களையும், பிரவீன் ஜெயவிக்ரம 4 விக்கெட்டுக்களையும், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டி சில்வா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

 

Image

இலங்கை கிரிக்கெட்டுக்கு மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், இந்த பந்துவீச்சாளர்கள் அனைவரும் 26 வயதுக்குட்பட்ட இளம் புயல்கள் ஆவர்.

வலுவான சுழலும் காலி ஆடுகளத்தில் இளம் பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் குறித்து அணியின் சிரேஷ்ட வீரரான அஞ்சலோ மெத்யூஸ் மகிழ்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.

இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் ஆகும். இந் நிலையில் இரண்டாவது இன்னிங்ஸுக்காக ஆடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மீதம் உள்ளன.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பேட்டி கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமானது.

 முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவர்களை எதிர்கொண்டு 386 ஓட்டங்களை குவித்தது. அதிகபடியாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களை பெற்றார்.

அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் 85.5 ஓவர்களில் 230 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

இதனால் 156 ஓட்ட முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 40.5 ஓவர்களில் 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்று டிக்ளே செய்தது.

இந்த இன்னிங்ஸில் ஏறக்குறைய எட்டு மாதங்களுக்குப் பிறகு சர்வதேசப் போட்டியில் விளையாடி மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களை குவித்தார்.

அவருக்கு மேலதிகமாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இந்தி இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 83 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த முடிவுகளின் அடிப்படையில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் வெற்றிக்கு 348 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

This image has an empty alt attribute; its file name is 4yt-K4E5

வெற்றியிலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை நேற்று ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள், நான்காம் நாள் ஆட்டம் நிறைவில் 25.3 ஓவர்களில் 52 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

போட்டியின் ஐந்தாம் நாளான இன்று அவர்களின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 296 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது.

ஆடுகளத்தில் பொன்னர் 18 ஓட்டங்களுடனும், ஜோசுவா டா சில்வா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். 

இன்று காலை 10.00 மணிக்கு போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகும்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen