நிகழ்வுகள்

வெலிஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட வெலிஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்படி நு /ஆகுரோயா தமிழ் வித்தியாலயம், நு /வெள்ளைஓயா இல 2 தமிழ் வித்தியாலயம், நு /வெள்ளைஓயா இல 3 தமிழ் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் வறுமை நிலையில் இருக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கே நேற்று (2021-07-26) குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கனடா நாட்டை சேர்ந்த பாலேந்திரா அவர்களின் அமரத்துவம் அடைந்த மனைவியான திருமதி.ரமணி பாலேந்திரா அவர்களின் பிறந்த நாளையும் அத்துடன் அவரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையும் முன்னிட்டு இக்குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வை, மஞ்சுல சுமந்த சில்வா மற்றும் அவரது பாரியாரான திருமதி.சுதர்சினி ஆகியோர் முன்நின்று நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்வில் வெலிஓயா கிராமசேவகர் திருமதி.வீணாதேவி அவர்களோடு குறித்த பிரதேச பால் சேகரிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.

இவ்வுலருணவுப் பொதிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் தமது நன்றிகளை பாலேந்திரா குடும்பத்திற்கும் ஒழுங்கமைத்தவர்களுக்கும் தெரிவித்தனர்.

மேலும் பாடசாலைகளில் பிள்ளைகளின் கல்விக்காக கல்வி சார்ந்த சில உதவிகளை செய்து தருமாறு அதிபர் உட்பட அப்பிரதேச மக்களும் கேட்டுக் கொண்டனர்.

பிரியா

Related Articles

Back to top button