செய்திகள்

வெலிகம போதைப்பொருள் கடத்தல் : வெளியாகிய திடுக்கிடும் தகவல்.!

வெலிகம பொல்அத்துமோதர கடற்கரை பகுதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் கடத்தல் டுபாயிலிருந்து வழிநடத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதான போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ள ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக்க இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மேலும் சிலர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் தொலைபேசியை தொடர்புகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெலிகம கடற்பிராந்தியத்தில் 200 கிலோகிராம் ஹெரோயினுடன் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட ஹெரொயினின் பெறுமதி 1758 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button