செய்திகள்

வெலிக்கடை போராட்டம் தொடர்கின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.

இந்த போராட்டத்தில் 4 கைதிகள் ஈடுபட்டுள்ளதாக இந்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே, இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ரோயல்பார்க் கொலைச்சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் அந்தனி ஜயமஹவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதற்கு குறித்த கைதிகள், எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.

நேற்று முற்பகல் முதல் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

Related Articles

Back to top button
image download