செய்திகள்மலையகம்

வெலிமடையில் மரம் முறிந்து வீழ்ந்தது – மூவர் உயிரிழப்பு.

வெலிமட நகரிலுள்ள பிரதேச சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு 9.45 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறுவர்களும் யுவதியொருவருமே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதுடன் வெலிமட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

14 மற்றும் 10 வயதான சிறுவர்களும் 18 வயதான யுவதியும் அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மொரவக்க கொடிகாரகொட பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.

கால்லவத்த பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த பெண் மொரவக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button