வெலிமட பிரதேச பொறலந்த சிலுமியபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று (27/01) உறுதிசெய்யப்பட்டது. குறித்த ஆசிரியருடைய சகோதரன் தொற்றுக் குள்ளாகிய நிலையில் அவரோடு நெருங்கிய உறவைப் பேணிய நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியானது. குறித்த நபரோடு தொடர்புடைய இதல்கெஸன தமிழ் மகாவித்தியாலய ஆசிரியர் நான்கு பேர் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்தார்.
நடராஜா மலர்வேந்தன்