செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பினர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில்
சிக்கியிருந்தவர்களில் மேலும் சிலர் இன்று (21) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச
விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கட்டாரில் இருந்து 290 பேரும், இந்தியாவிலிருந்து 58 பேரும்,
இத்தாலியிலிருந்து 116 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 21 பேரும்
நாடு திரும்பியதாக தெரியவருகிறது.

மேலும்,கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு
உட்படுத்தப்பட்ட இவர்கள் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக
அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button