அரசியல்செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தனிமைப்படுத்தல் இலவசம்..

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, கட்டணம் செலுத்தி தம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமல்ல எனவும் நாமல் ராஜபக்ஸ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வௌிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் காணப்படும் சிக்கலை நிவர்த்தி செய்வதற்கு, ஜனாதிபதி மேற்கொள்ளும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Source -www.newsfirst.lk/tamil

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com