நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
வகையில் புதிய செயலியொன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக அரசாங்கம்
தெரிவித்துள்ளது.அத்துடன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள விடுதிகளை அண்மித்து
கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே தொற்று
உறுதியாகும் பயணிகள் இந்த நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு
சிகிச்சை கட்டணங்கள் பயணிகளே செலுத்த வேண்டும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நாடு முழுவதும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தங்க
வைக்க 131 ஹோட்டல்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் 36 ஹோட்டல்களில்
சுற்றுலா பயணிகளை தங்க வைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா
அபிவிருத்தி சபையின் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம்.
