செய்திகள்

வெளிநாட்டு தொழிலுக்காக செல்லவிருப்போரின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு..

தொழில் வாய்புக்காக வெளிநாடுகள் செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (12) இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் இலங்கையர்களுக்கு அதிக கேள்வி காணப்படுவதால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு, பயணிப்பதற்காக விமான இருக்கை வசதி பற்றாக்குறை குறித்து நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

வசதியான விமானத்தில் இவர்கள் பயணிப்பதற்கு ஏற்பாடுகளை செய்துக்கொடுக்கமாறும் அதிகாரிகளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button
image download