செய்திகள்மலையகம்

வெளிமடை பிரதேச டயரபா தோட்டத்திற்கு சொந்தமான காணிகளை வெளியாருக்கு பிரித்து கொடுப்பதை நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்….

வெளிமடை பிரதேச டயரபா தோட்டத்திற்கு சொந்தமான காணிகளை வெளியாருக்கு பிரித்து கொடுப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் கட்சியின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ் தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் டயரபா கீழ் பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டோர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சென்ற வெளிமடை பொலிஸ் நிலைய அதிகாரி மூலம் மக்களின் பிரச்சனைகளை வெளிமடை பிரதேச செயலாளருக்கு முன்வைக்கப்பட்டதோடு ,

குறித்த பிரச்சனைக்கு தீர்வு பெற்று கொடுக்கம் முகமாக எதிர்வரும் 29/01/2020 புதன்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் பிரதேச செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உரிய தீர்வு கிடைக்காதவிடத்து போராட்டம் தொடரும் என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் !

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Back to top button