செய்திகள்
வெள்ளத்தினால் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
கடந்த தினங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையின் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 60 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 224 52 நலன்புரி நிலையங்களில் 3 ஆயிரத்து 332 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 332 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவு
பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட 31
ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


