செய்திகள்

வெவ்வேறு விபத்துக்களில் 12 பேர் உயிரிழப்பு.

நாட்டில் 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 12 பேர்
உயிரிழந்துள்ளனர்.

வெவ்வேறு விபத்துக்களில் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் நாளொன்றில் அதிகபட்சம் 8
பேர் வரை மாத்திரமே விபத்துக்களில் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய, ஒப்பீட்டளவில் கடந்த 24 மணித்தியாலங்களிலேயே விபத்துக்களினால்
ஏற்பட்ட உயிரிழப்பு அதிகளவில் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற
விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மது போதையில் வாகனம் செலுத்திய 253 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது
செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com