செய்திகள்

வேகமாக பரவும் கொவிட் தொற்று : முடக்கப்படும் அபாய கட்டத்தில் சில மாவட்டங்கள்

கொவிட்19 தொற்று பரவல் ஏனைய பிரதேசங்களை விடவும் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக புதிய சுகாதார அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோய் விஞ்ஞான பிரிவினால் வெளியிடப்பட்ட கடந்த 7 நாள் அறிக்கைக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது. அவ்வாறான நிலைமையில் டெல்டா வைரஸ் தொடர்பில் உரிய பாதுகாப்பின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் ஆடை கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறந்து வைக்கப்பட்டடுள்ளமையினால் பாரிய கொவிட் ஆபத்து ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் எதிர்வரும் நாட்களில் முழு நாட்டுக்கும் மிகவும் அபாயம்மிக்க நிலைமை ஏற்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பொறுப்பற்ற வகையில் செயற்பாடுகள் தொடருமாயின் மேல் மாகாணம் முழுமையாக முடக்கப்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு ஏற்கனவே பரவியிருக்கலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button