அரசியல்செய்திகள்

வேட்பாளர்கள் 12 ஆயிரம் தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிக்க முடியுமாம்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஒவ்வொரு வேட்பாளர்களும், தங்களுக்கு 12 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபித்துக் கொள்ளமுடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
முழு இலங்கைக்கும் ஒரு தலமை காரியாலயத்தை ஸ்தாபிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டங்களுக்குமான  தனித்தனி மாவட்ட அலுவலகங்களையும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஸ்தாபிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  வேட்பாளர் ஒருவருக்கு 22 மாவட்ட தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபிக்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களில் 100 சதுர அடியை கொண்ட பதாதைகளை வைப்பதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 15 க்கு 15 சதுர அடியை கொண்ட டிஜிட்டல் பதாதைகள் மூன்றும் தேர்தல் அலுவலகங்களில் காட்சிபடுத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிரீ ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ,ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 35 வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்களை செய்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளூடாக 18 பேரும், வேறு அரசியல் கட்சிகளூடாக இருவரும், 15 சுயேச்சை வேட்பாளர்களும் இம்முறை போட்டியிடுகின்றனர்.

Related Articles

Back to top button
image download