வேதன அதிகரிப்பை கோரி பல பகுதிகளில் போராட்டம்
பெருதோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பை கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், யடியந்தோட்டை லெவன்ட் தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், வெலிமடை – பயரபா தோட்ட மக்களும் இன்றைய தினம் வேதன அதிகரிப்பை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, பூண்டுலோயா நகர் பகுதியிலும் இன்று மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அகரபத்தனை பகுதியிலும் 800 தொழிலாளர்களுக்கு மேல் ஒன்றுக் கூடி வேதன உயர்வை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஹட்டன் – டயகம – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டி – பன்வில பகுதியிலும் வேதன உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்ட மக்களினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரும் கலந்து கொண்டுள்ளார்.