செய்திகள்

வேன் தாக்கப்பட்ட சம்பவம் – முக்கிய பிரமுகர் உட்பட 8 பேருக்கு பிணை.

கொழும்பு – கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கணித ஆசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க உட்பட 8 பேரிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று அத்தனகல்ல நீதிவான் தரங்க ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த விதத்திலும் மிரட்டல் விடுக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வழக்கை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button