செய்திகள்

வேயங்கொடையில் ஒருவர் அடித்துக் கொலை.

வெயாங்கொட கும்புல்ஒலுவ பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்ததர்க்கம் வலுவடைந்ததில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button