செய்திகள்

வேயாங்கொடை ஹல்கம்பிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி வேயாங்கொடை – மாளிகாதென்ன பகுதியில் ஒருவரை வெட்டிக் கொலை செய்ய திட்டமிட்டிருந்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) அதிகாலை குறித்த சந்தேக நபருடன் பேலியகொடை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சிலர் சோதனை நடவடிக்கைக்காக வேயாங்கொடை ஹல்கம்பிட்டிய பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.
கொள்ளை மற்றும் கைக்குண்டு வைத்திருந்தமை தொடர்பில் ஏற்கனவே சில வழக்குகளை எதிர்நோக்கியுள்ள 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button