கல்விபதுளைமலையகம்

வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களது சொந்த மாகாணங்களில் நியமிக்க உடனடி நடவடிக்கை..?

தேசிய கல்வியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாட நெறியை பூர்த்தி செய்து வேறு மாகாணங்களில் நியமனம் பெற்ற ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களது சொந்த மாகாணங்களில் நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,இன்றைய தினம் மத்திய கல்வியமைச்சு 44 டிப்ளோமாதாரிகள் தொடர்பான பெயர் பட்டியலை ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளதாக ஊவா மாகாண பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்று வெளிமாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய டிப்ளோமா தாரிகள் ஊவா மாகாணத்தில் நியமனம் பெறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

ஊவா மாகாண டிப்ளோமா தாரிகள் தொடர்பான தகவல்களை ஊவா மாகாண கல்வி அமைச்சு உரிய நேரத்தில் வழங்காமையின் காரணமாக அவர்களை வௌ;வேறு மாவட்ட பாடசாலைகளுக்கு மத்திய கல்வி அமைச்சு நியமித்தது.

இதனை அடுத்து தம்மை சொந்த மாகாணத்தில் கடமைக்கு அமர்த்துமாறு 54 டிப்ளோமா தாரிகள் கல்வி அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட மேன் முறையீட்டு குழுவில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

அருள்

Related Articles

Back to top button