செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வைத்தியர்கள் தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.நேற்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

வைத்திய நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதா இல்லையா என்பது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்றும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

Related Articles

Back to top button